Wednesday, December 4, 2013
Tuesday, November 12, 2013
அன்பின் வாசல்: கண் பார்வையை எப்படி பாதுகாப்பது-?
அன்பின் வாசல்: கண் பார்வையை எப்படி பாதுகாப்பது-?: உ டலில் முக்கிய பாகங்களில் ஒன்று கண்கள். அந்த கண்களை சரியாக பராமரிக்க வேண்டும். கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க தினமும...
Sunday, October 27, 2013
என்.கணேசன்: எனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?
என்.கணேசன்: எனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?: கல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...
Thursday, October 24, 2013
Health Tips - Self Cure - Home Remedy: Alkaline Foods - Acidic Food
Health Tips - Self Cure - Home Remedy: Alkaline Foods - Acidic Food: In our day to day life whatsover the food we eat it can be classified into two categories alkaline food and acidic food. Alkaline food giv...
திண்டுக்கல் தனபாலன்: நான் + துன்பம்
திண்டுக்கல் தனபாலன்: நான் + துன்பம்: வணக்கம் நண்பர்களே... அன்புச் சகோதரியும் துணைவியும் நலமடைந்து வருகிறார்கள்... அன்பையும் ஆறுதலையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல.....
மருத்துவம்-ஆன்மிகம்-தமிழர்கள் மற்றும் சித்த பாரம்ப: அற்புதமான கீரைகள் பட்டியல்...!!!
மருத்துவம்-ஆன்மிகம்-தமிழர்கள் மற்றும் சித்த பாரம்ப: அற்புதமான கீரைகள் பட்டியல்...!!!: கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீண...
கோரக்கர்: மந்திரம்-காகபுஜண்டர்(பாகம் -1)
கோரக்கர்: மந்திரம்-காகபுஜண்டர்(பாகம் -1): காகபுஜண்டர் தோற்றம்: பல ஆயிரம் சூரியர்களை ஒன்றடக்கிய அருளொளி கொண்டு; காதில் கவச குண்டலம் தரித்துக் கொண்டு; கழுத்தில் ருத்திராட்ச மாலை அணி...
Health Tips - Self Cure - Home Remedy: RECIPE FOR MOJITO BLASTO.......
Health Tips - Self Cure - Home Remedy: RECIPE FOR MOJITO BLASTO.......: Dear Viewers, As I promised i would like to provide you the detailed instructions for the preparation of Mojito Blasto (One of the best ...
Friday, October 18, 2013
Tuesday, October 15, 2013
Monday, October 7, 2013
Sunday, September 1, 2013
தேவதையை அன்பால் அரவணைப்போம்.
தேவதையை அன்பால்
அரவணைப்போம்.....
கடவுள் உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்த தேவதை உங்கள்
மனைவி!நீங்கள் இன்னொரு வீட்டிற்கு அனுப்பி வைத்த தேவதை உங்கள் தங்கை!
வந்த தேவதையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்!
சென்ற தேவதையை கடவுள் பார்த்துக் கொள்வார்!
வெந்நீரும் வியாதியும்
வெந்நீரும் வியாதியும்
தண்ணீரின் தேவை உலக வாழ்வில் முதன்மையானது என்பது அறியப்பட்ட செய்தி. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பழந்தமிழர் நெறி. நீரைக் காய்ச்சிக் குடித்தால் உடலுக்கு நன்மை தரும் என்பது சுகாதாரம் விரும்புவோர் கூறும் பொதுக் கருத்து. ஆனால், நீரைக் காய்ச்சி, எந்தெந்த முறையில் அருந்தினால் என்னென்ன பயன்களைத் தரும் என்று சித்த மருத்துவ நெறியாக உரைக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
“காய்ச்சிய நீர் சூடாகப் பருகினால், நெஞ்செரிச்சல், நெற்றிவலி, புளிச்ச ஏப்பம், வயிற்று நோய், இருமல் போகும். காய்ச்சி ஆறிய நீர் அருந்தினால், உழலை, விக்கல், அதிசாரம், பித்தம், மூர்ச்சை, விஷ வாந்தி, மயக்கம், மேகம், உலர்ச்சி, கண்ணோய், திரிதோஷம், செவிநோய், சூலை, குன்மம், சுரம், ஐயம், வாத கோபம் போகும்.’’ என்று தண்ணீர் வெந்நீரானால் உண்டாகக் கூடிய பயனை விளக்கு கிறது.
வெந்நீரும் பாத்திரமும்
தண்ணீரைக் காய்ச்சவும், காய்ச்சிய நீரைச் சேமிக்கவும் மட்கலங்களிலிருந்து மாறி உலோகப் பாத்திரங்களுக்கு நாகரிக வாழ்க்கை வளர்ச்சியடைந்திருக்கிறது. அவ்வாறு வளர்ச்சியடைந்த தன் பயன் என்னவென்பதை உரைப்பதாக, மருத்துவச் செய்தி அமைகிறது. வெந்நீர் எந்தெந்த உலோகங்களுடன் சேர்ந்திருந்தால் என்ன பலன் என்பதைக் கீழ்க்கண்டவாறு கூறுவர்.
1. பொற்கெண்டி : வாயு, கபம், அருசி, மெய்யழல், வெப்பு போகும். விந்து, நற்புத்தி, அறிவு உண்டாகும்.
2. வெள்ளிக் கெண்டி : வெப்பு, தாகம், குன்மம், பித்தம், ஐயம், காய்ச்சல் போகும். உடல் செழிக்கும். பலம் உண்டாகும்
3. தாமிர பாத்திரம் : இரத்த பித்தம், கண்புகைச்சல் போகும்.
4. பஞ்சலோகம் : முக்குற்றங்கள் நீங்கும்.
5. வெங்கலப் பாத்திரம்: தாது உண்டாகும்.
6. கெண்டி : நோய், சிரங்கு, வாய்க்குடைச்சல் போகும்.
7. பன்னீர்ச் செம்பு : சுவாசம், விக்கல், பிரமை, பித்த, ஐயவாயு, தாள் வலி போகும்.
8. இரும்பு பாண்டு நோய் போகும்; தாது உண்டாகும்; நரம்பு கெண்டி உரமாகும்; உடல் குளிர்ச்சி அடையும்
என்று, உலோகத்தினால் உண்டாகும் பயன் வெந்நீர் அருந்தும் போது கிடைப்பது உரைக்கப்பட்டுள்ளது.
வெந்நீர் மருந்து...
தண்ணீர் எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பதை உணர்த்தும் மடை நூலைப் போல, தண்ணீர் வெந்நீரினால் என்னென்ன பயன் உடலுக்குக் கிடைக்கிறது என்பது மேலே குறிப்பிடப் பட்டுள்ளது. தண்ணீர் வெந்நீராகக் காய்ச்சப்படும்போது எந்த அளவு காய்ச்சினால் என்ன பலன் என்பதை,
"கால் கூறு காய்ந்த வெந்நீர் பித்தத்தைப் போக்கும்
அரைக் கூறு காய்ந்த வெந்நீர் வாதம், பித்தம் ஆகிய போக்கும்
முக்காற்கூறு காய்ந்த வெந்நீர் வாதம், குளிர், நடுக்கல்,
பித்தசுரம், வெக்கை, வாதபித்த ஐயம் போகும்.''
என்று பதார்த்த குண சிந்தாமணி விளக்குகிறது.
வாத, பித்த, ஐயம் என்பதே அனைத்து நோய்களும் என்பதால், அனைத்து நோயிலிருந்தும் விடுபட வெந்நீர் மருந்தாக அமைகிற தென்பதை அறியலாம். மேலும், நீரைக் கால், அரை, முக்கால் என்கிற முறையில் காய்ச்சுவதைப் போல, நீரை மருந்தாகவே மாற்றிட எட்டுப்பாகத்தில் ஒரு பாகமாகக் காய்ச்ச வேண்டும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. எண்சாண் உடம்பு, எறும்பும் தன்கையால் எட்டு என்று உலக உயிர்கள் எட்டுப் பாகமாகத் தோன்றியுள்ளதைத் தெரிவிக் கிறது. எட்டுக்கு ஒன்றாகத் தண்ணீரைக் காய்ச்ச வேண்டும்
என்றுரைப்பதும் உலகத்தின் உயிரினத் தோற்றத்துடன் தொடர்புடையதாக அமைவது போல் இருப்பதை அறியலாம்.
" இயம்பிட வெளிதே வெந்நீர் இயம்புவன் சிறிது கேண்மின்
நயம்பெறத் தெளிந்த நீரை நன்றாக வடித்தெ டுத்துச்
சயம்பெற எட்டொன் றாக்கித் தான் குடித் திடுவீ ராகில்
வயம்பெறு பித்த வாத சேப்பனம் மாறும் மெய்யாய்''
என்றும்,
"சொல்லிய நாழி கொண்டு தூணியில் எட்டொன் றாக்கி''
என்றும்,
"நன்னீர் விட்டே யெட்டொன்றாய் நாடிக் காய்ச்சிக் கொள்வீரே''
எனவும், காய்ச்சும் முறை உரைக்கப்பட்டுள்ளது. இம்முறை மருந்து தயாரிக்கும் போதும், தைலம் தயாரிக்கவும் பயன்படும் என்பது அறியப்படுகிறது. இவ்வாறு காய்ச்சுவதனால் பெருக்கத்து வேண்டும் சுருக்கம் என்பது போல பெருக்கம் என வளர்த்த பொருளைச் சுருக்கம் என மூலப் பொருளாக மாற்றினால் அது மருந்தாக அமையும் எனத் தெரிகிறது

இயற்கை மருத்துவம்..!
இயற்கை மருத்துவம்..!
சித்த மருத்துவம், இயற்கை வழி இயன்றது. மருந்துப் பொருள்களின் இயற்கை வடிவமும் ஒன்று.
உதாரணமாக,
பார்வைக்குச் சிறுநீர்ப்பை போன்றிருக்கும் அவரை விதை, சிறுநீர் அடைப்பைப் போக்கும்.
கற்பப்பை போன்றிருக்கும் கொய்யாக்காய், கற்பக் கோளாறைப் போக்கும்.
மூளை போன்றிருக்கும் அக்ரூட், மூளை வளர்ச்சிக்கு மருந்தாகிறது.
இதயம் போன்றிருக்கும் செந்தாமரை, இதய நோய்க்கு மருந்தாகிறது.
கண்ணின் மணி போன்றிருக்கும் நெல்லிக்காய், கண் நோய்க்கு மருந்தாகிறது.
உயிரணு போன்றிருக்கும் எள், உயிரணு வளர்ச்சிக்கு உதவுகிறது.
மூலிகைகளைப் பயன் படுத்திய சித்த மருத்துவர்கள், அந்த மூலிகைப் பொருள்களுக்குச் சூட்டியுள்ள காரணப்பெயரே சான்றாகும்.

Subscribe to:
Posts (Atom)